சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்காக, சிலர் சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.