கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்ய போர் விமானங்களால் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி, நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர் காவுக்கொல்லப்பட்டதை மறைக்க ரஷ்ய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் முயல்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பாழடைந்த திரையரங்கைச் சுற்றி சமீபத்தில் ஒரு திரை அமைக்கப்பட்டதாக, ஒரு புல்டோசர் கட்டடத்தின் பின்பகுதியில் சிலவற்றை இடித்ததை காண்பிப்பதாகவும் சமீபத்திய காணொளிகள் காட்டுகின்றன.
ரஷ்யர்கள் திரையரங்கின் முன்பகுதியை அப்படியே விட்டுவிட்டு, மீதமுள்ள கட்டமைப்பை அழித்து, மரியுபோல் மக்களின் எலும்புகளில் ஒரு புதிய திரையரங்கைச்; கட்ட திட்டமிட்டுள்ளதாக, நகரின் நாடுகடத்தப்பட்ட உக்ரைனிய மேயரின் உதவியாளர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ குற்றம் சாட்டினார்.
கடந்த பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து, மரியுபோல் முற்றுகையிடுவதற்கு முன்பு, திரையரங்கு நகர வாழ்க்கையின் மைய புள்ளியாக இருந்தது.