நத்தார் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6
கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதற்கமைவாக சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்றன காரணமாக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 6 கைதிகளும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை நாடாளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 309 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.