நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர கடலோர, புத்தளம் மற்றும் பிரதான வழித்தடங்களில் தலா ஒரு புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையே இதற்கான பிரதான காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 500 பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளமையினால் ஏற்பட்ட வெற்றிடத்தால் நேற்றும் 30 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தது.
ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.