அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அல்லது நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வருமானம், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில திட்டங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டம் தொடர்பில் தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.