சுற்றுலா நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்று (24) நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாட அழைத்த நிலையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 385 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பாக சுப்மன் கில் 112 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 101 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து 386 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 295 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பாக டெவோன் கொன்வே 138 ஓட்டங்களை அதிகலபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.