• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாவிதன்வெளி  பிரதேச சபையை மீண்டும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியது!

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!

shagan by shagan
2023/01/25
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் . மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது.
வெற்றிடமாகி இருந்த தவிசாளர் பதவிக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான இக்கூட்ட அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 13 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.

இதன்போது கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்ததோடு புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

இந்நிலையில் மூவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது.இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட மூன்று புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

இதன் போது நடைபெற்ற தேர்வில் வாக்குகளை குறைவாக பெற்ற புதிய தவிசாளர் தேர்வு உறுப்பினரான திருமேனி யோகநாதன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு ஏனைய இரு போட்டியாளர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அந்தோனி சுதர்சன் மற்றும் சிவலிங்கம் குணரட்னம் ஆகிய இருவரில் புதிய தவிசாளர் பதவிக்காக தெரிவு செய்வதற்கு மீண்டும் இரண்டாவதாக பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கு சபையின் 13 உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 04 உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 02 உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருமாக 07 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அந்தோனி சுதர்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மற்றுமொரு புதிய தவிசாளர் தேர்வு உறுப்பினரான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவலிங்கம் குணரட்னத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் என 04 பேர் வாக்களித்தனர். இத்தேர்வில் சுயேட்சைக்குழு மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் உறுப்பினர் என 02 பேர் நடுநிலை வகித்திருந்தனர்.

இந்நிலையில் மூன்று மேலதிக வாக்குகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அந்தோனி சுதர்சன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
இதன்போது நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் அந்தோனி சுதர்சன் என்பருக்கு 07 வாக்குகளும் அதே கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட மற்றுமொரு உறுப்பினரான சிவலிங்கம் குணரட்னம் என்பருக்கு 04 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் புதிய தவிசாளரை ஆதரித்தனர்.நாவிதன்வெளி பிரதேச சபை கடந்த காலத்தில் மேற்படி சபையை கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் சுயேட்சைக் குழு உறுப்பினர் அமரதாஸ ஆனந்த என்பவர் தவிசாளராக ஆட்சி செய்து வந்த நிலையில் 14 குற்றச்சாட்டுக்கள் பெருன்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு 2023ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினால் வறிதான தவிசாளர் வெற்றிடத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்குறித்த புதிய தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி பிரேரித்து முன்மொழிந்தது அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் முருகப்பன் நிரோஜன் வழிமொழிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 07 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய தவிசாளராக தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய தவிசாளர் தெரிவினை தொடர்ந்து புதிய தவிசாளர் அந்தோனி சுதர்சன் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் பலரும் புதிய தவிசாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.மேலும் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளரை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சபைக்கு வருகை தந்து பாராட்டினார்.

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையை சுற்றி சவளக்கடை பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா !

Next Post

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்

Related Posts

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !
இலங்கை

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

2026-08-29
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !
இலங்கை

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

2026-08-29
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!
இலங்கை

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

2026-08-29
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!
இலங்கை

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

2026-08-29
துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !
இலங்கை

துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

2026-08-29
கோனபால சந்திப்பு அருகே கொள்கலன் லொறி  கவிழ்ந்து விபத்து!
இலங்கை

கோனபால சந்திப்பு அருகே கொள்கலன் லொறி கவிழ்ந்து விபத்து!

2026-08-29
Next Post
நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்

தேர்தலுக்கு தயார் இல்லை என்றால் தேர்தலில் இருந்து விளகிக் கொள்ளலாம் – அரசாங்கத்திடம் தெரிவித்தார் சரித ஹேரத்!

தேர்தலுக்கு தயார் இல்லை என்றால் தேர்தலில் இருந்து விளகிக் கொள்ளலாம் – அரசாங்கத்திடம் தெரிவித்தார் சரித ஹேரத்!

ரஞ்சனுக்கு வழக்கப்பட்டுள்ள தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது- சரத் பொன்சேகா

தேர்தலைத் திட்டமிட்ட திகதியில் நடத்தாவிடின் மக்கள் அனைவரும் வீதியில் இறங்குவார்கள் - சரத் பொன்சேகா!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

0
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

0
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.