ஆசியக்கிண்ணத் தொடரில் விளையாட இந்திய அணி ,பாகிஸ்தான் பயணிக்காது என்பதில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதியாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கிண்ணத் தொடரை பொதுவான திடலில் நடத்த வேண்டும் என இந்தியா தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில், இந்த தகவல் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கிண்ண தொடரை எங்கே நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, பஹ்ரைனில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் சபை கூட்டத்திற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளரும், ஆசிய கிரிக்கெட் சபையின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா சென்றுள்ளனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.