வட மாநிலத்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்ததே குற்றங்கள் அதிகரிக்க காரணம் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகியோர் இணையும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர, பா.ஜ.,வுக்கு வேறு கோட்பாடு, கொள்கை எதுவும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாம் இருக்கும் வரை எட்டு வழி சாலை ,பரந்தூர் விமான நிலையம், பேனாச்சின்னம் உள்ளிட்ட எதையும் அமைக்க முடியாது என்றும் சீமான் கூறியுள்ளார்.