புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க உயிரிழந்த வீரர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது என்றும் புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 40 சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.