மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், ஜேஸன் ஹோல்டர் 3 ஓட்டங்களுடனும் மோட்டி 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
சிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி, 175 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
புலவாயோ மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, முதல் இன்னிங்ஸிற்காக, 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இன்னோசென்ட் கையா 38 ஓட்டங்களையும் ட்ரிபானோ ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், மோட்டி 7 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் முன்றாம் நாள் ஆட்டத்தை இன்று மேற்கிந்திய தீவுகள் அணி தொடரவுள்ளது.