பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாதிக்கு, பிணையில்லா ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள பஃபேலோ பல்பொருள் அங்காடியில், பேட்டன் ஜென்ட்ரான் என 19 வயதான இளைஞன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 கறுப்பினத்தவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 3பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், பேட்டன் ஜென்ட்ரான் மீதான வழக்கு விசாரணை நேற்று (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் மீது முதல் நிலை கொலை மற்றும் வெறுப்பால் தூண்டப்பட்ட பயங்கரவாதம் உட்பட 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
துப்பாக்கி ஏந்திய நபர் தனது தாக்குதலுக்கு முன், நியூயோர்க்கில் உள்ள கான்க்ளினில் உள்ள தனது வீட்டில் இருந்து 200 மைல் (320 கிமீ) தொலைவில் இருந்த பஃபேலோவில் கறுப்பு இன அமைப்பு குறித்து ஆய்வு செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
புல்லட்- ரெசிஸ்டண்ட் கவசத்தை அணிந்த அவர், டாப்ஸ் ஃப்ரெண்ட்லி மார்க்கெட்டில் மே 14 தாக்குதலை நேரலையில் ஒளிபரப்பினார்.
ஒன்லைனில் அவர் சந்தித்த இனவெறி சதி கோட்பாடுகளால் வெறுப்புக்கு ஆளான ஜென்ட்ரான், சில சாட்சியங்களின் போது அழுதார் மற்றும் ஒரு சுருக்கமான அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.
சிலர் கோபமாக அவரைக் கண்டித்தனர்; மற்றவர்கள் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டினார்கள் மற்றும் அவருக்காக ஜெபிப்பதாகக் கூறினார்கள். அவர் வேண்டுமென்றே வெள்ளையர்களின் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கறுப்பின சமூகத்தைத் தாக்கியதாகப் பலர் சுட்டிக்காட்டினர்.
இதனிடையே தண்டனைக்கு முன்னதாக, உறவை இழந்த ஒரு குடும்ப உறுப்பினர், குற்றவாளியை தாக்க முயன்றார். அப்போது அவர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். எனினும், தாக்குதலுக்கு முயன்றவர் மீது குற்றம் சாட்டப்பட மாட்டாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.