ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார். இன்னும் அடையாளம் காணவில்லை.
ஊகங்களைப் பகிரவோ அல்லது வதந்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு பொலிஸ்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
யெகோவாவின் கிறிஸ்தவ அடிப்படையிலான மத இயக்கம், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் தலைமையில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இந்த இயக்கத்தின் தலைமையகம் நியூயோர்க்கில் உள்ளது.