பாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு இறத்தல் பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அச்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக விலையை மேலும் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.