பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ரொய்ட்டர்ஸிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.