இலங்கையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்தெரிவித்துள்ளது.