ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங் கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணி வரை கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.