அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (திங்கட்கிழமை) டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாயாகவும் ,விற்பனை விலை 303.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கையில் தங்கத்தின் விலையும் இன்று மேலும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்,கொழும்பு செட்டியார் தெருவில் தங்கச் சந்தையில் இன்று காலை 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 150,800 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 165,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 163,000 ரூபாயாக குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.