யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். மேலும் இந்த வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்,உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.