தழிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது 35 சதவீதமான இயந்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.