சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் நூற்றுக்கணக்கான பல்வேறு இணையதளங்களில் கிடைக்கின்றன.
அவ்வாறான பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா போன்ற விடயங்களை ஆராயுமாறு வலியுறுத்தினார்.
மேலும் சருமத்தை அழகாக மாற்றும் எந்தவொரு பொருளையும் தாம் பரிந்துரைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எவராவது, தோலில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அது படிப்படியாகவும் முறையாகவும் செய்யப்பட வேண்டும் என தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட குறிப்பிட்டுள்ளார்.