நாட்டில் இரத்தக்களரி ஏற்படுவதற்கு மதத்தலைவர்களே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார்.
குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும் சிங்கள மக்களுக்குரியதும் என பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.
அங்கே தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று இந்த வரலாற்றை இவர் முதலான தேரர்கள் படிக்கவேண்டும்.
பூர்வீகமாக பஞ்ச ஈஸ்சரங்களை கொண்டு தமிழர்கள் வாழ்ந்தார்கள்.
பிரபாகரனின் கொள்கைகளை தமிழக் கட்சிகள் பின்பற்றுவதாக மேதானந்த எல்லாவல தேரர் குறிப்பிடுகின்றார்.
இவர் போன்றோர் சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும வினைகளைச் செய்கின்றனர்.
இந்த நாட்டில் இரத்தக்களரி ஏற்படுத்துவதற்கும் மதத்தலைவர்கள் தான் காரணம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.