மின்னல் தாக்கிய பெண் ஒருவருக்கு அபார சக்தியொன்று கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ம்பர்லி க்ரோன். ஆறு பிள்ளைகளின் தாயாரான இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியுள்ளது.
சமையல் வேலையில் அவர் ஈடுபட்டிருந்த போதே அவரை மின்னல் தாக்கியுள்ளது.
இதில் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு , நெஞ்சுப்பகுதியிலும் பாரிய வலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நரம்பு மண்டலமும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அதே சமயம் இச்சம்பவத்தில் க்ரோனின் ஒன்பது வயது மகன், டிரிஸ்டனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், அவர் தான் அவசர சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்தி உதவி கோரியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த அவசர உதவியாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மின்னல் தாக்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பிரபல ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
அதில், இச்சம்பவத்தின் பின்னர் அவருக்கு ஒரு அசாதாரண திறன் வந்துள்ளதாகவும், இத் திறன் மூலம், புயல்கள் உருவாகும் முன்னரே அதை உணர முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார.
மேலும் புயல் மேகங்கள் சூழும் போது, தனது மார்பு பகுதியில் இறுக்கமான உணர்வு ஏற்படுவதாகவும் அவ்வப்போது தலைசுற்றல், பய உணர்வு போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.