வர்த்தமானி அறிவித்தலின்படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதமாக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2,270 ரூபா 2 சதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவுலானிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70.32 ஆக விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.