ரஷ்யாவின் நிலை குறித்து தான் கவலையடைவதாகவும், ரஷ்ய மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இது வரை காலமும் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்து வந்த வாக்னர் குழுவினர் திடீரென அந்நாட்டுக்கு எதிராகத் திரும்பியதையடுத்து ரஷ்யாவில் பேர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ரஷ்யாவின் நிலை குறித்து தான் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரிஷி சுனக் “அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி ஷோல்ஸ் ஆகியோரிடமும் இது குறித்து பேசியுள்ளதாகவும் ரஷ்யாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் இடம்பெற்று வரும் நிலையில் பிரித்தானியா உக்ரேனுக்கு தனது ஆதரவினை வழங்கி வந்தது. இந்நிலையில் ரிஷி சுனக், ரஷ்ய மக்களுக்காக தமது கவலையினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.