தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.
எவ்வாறாயினும், அதற்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் மாதம் ஓய்வுபெறவிருந்த நிலையில் அவரது சேவையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி, அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்ட நிலையில் பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.