தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்’ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என வெளிநாட்டு அமைச்சருக்கு தெரிய வேண்டும்.
கோட்டாபயவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது கிடைப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும்.
எனவே இனப்பிரச்சனை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்த பிரச்சனைக்கான தீர்வை கேட்கவில்லை.
இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும் திட்டங்களை செய்து வருகின்றனர். என வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் ஆகும்.
2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடகிழக்கில் வித்தியதசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது.
ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் குறிப்பாக உயர்ந்த மலைகளில் அமைப்பது சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.















