லித்தியம்- அயன் மின்கலத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப்(John Goodenough, ) தனது 100 ஆவது வயதில் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தொலைபேசி, கணினி மற்றும் மின்சார கார்கள் போன்றவற்றுக்கான லித்தியம்-அயன் மின்கலத்தை உருவாக்கியதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
வேதியியலுக்கான இந் நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
1980-ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போதே ஜான் குட்எனப், லித்தியம் அயன் மின்கலத்தைக் கண்டுபிடித்தார்.
1922-ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.