வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் நிலவும் வளப்பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.
குறித்த கல்வியியல் கல்லூரியில் காணப்படும் வளப்பற்றாக்குறை குறித்து அக் கல்லூரியின் பீடாதிபதி குணரட்ணம் கமலகுமார் தலைமையிலான குழுவினர் திலீபனுக்கு சுட்டிக்காட்டிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போதுஆசிரிய மாணவர்களின் வசதி கருதி அமைக்கப்பட்ட கட்டிடங்கள் பல கட்டிடத்திணைக்களத்தின் அசமந்தப்போக்கால் பல ஆண்டுகளாக நிறைவுறாது காணப்படுகின்றமை, கேட்போர் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட தரமற்ற வேலைகள், சுற்றுமதிலின் ஒரு பகுதி அமைப்பத்தில் ஏற்படும் கால தாமதம், ஆசிரிய மாணவர் விடுதி பயன்படுத்தமுடியாமல் காணப்படுகின்றமை மற்றும் நீர்த்தாங்கி பிரச்சனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனையடுத்து அவர் சில திணைக்கள தலைவர்களுடன் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு காலதாமதமாகும் பணிகளை உடனடியாக செய்வதற்கு உத்தரவிட்டிருந்ததுடன், ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலார்களை நிரந்தரமாக்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் தாம் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.