இந்துக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று நியூயோர்க்கில் பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது அமெரிக்க வாழ் இந்துக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்துக்கள் அதிகளவில் வாழும் நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியை நியூயோர்க் நகரம் பொது விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநில சட்டமன்றமும், மாநில செனட்டும் நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். இது தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து சமூகத்தினரதும் வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.