மேற்கு கென்யாவில் லண்டியானி என்ற பகுதியில் நேற்றைய தினம் (30) வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இக்கொடூர விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இக்கொடூர விபத்து குறித்து அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உட்பட பல தலைவர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கென்யாவில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.