டுவிட்டர் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ‘திரெட்ஸ்‘ (Threads) என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயற்பட்டுவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரைக் கைப்பற்றிய எலோன் மஸ்க் டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார்.
குறிப்பாக அண்மையில் அங்கீகரிக்கப்பட்டாத பயனர்கள் நாளொன்றுக்கு 1,000 பதிவுகள் மட்டும் பார்க்க முடியுமென கட்டுப்பாடுகள் விதித்திருந்தமை பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள திரெட்ஸ் செயலியானது தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றும், பயன்பாடுகள் அனைத்தும் டுவிட்டரைப் போன்றும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.