விவசாயிகளை ஏற்றுமதி இலக்குடன் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்லும் உள்ளூர் விதை விநியோக நிகழ்வு மாவத்தகம மீபேயில் இன்று – பிரதமர் தினேஷ் குணவர்தனவினவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விவசாயிகளை மறந்துவிட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது என நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் இருந்து இன்று மீண்டு எழுந்துள்ளமைக்கு முக்கிய காரணம் விவசாயமும் , விவசாயிகளின் முயற்சியே என தெரிவித்த அவர், நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கான விசேட இலக்குகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் , அரசாங்கம் என்ற வகையில் நாட்டை சிக்கலான நிலையில் இருந்து இயல்பான நிலைக்கு மாற்றியமைக்க சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிப்பதுடன், பொதுச் சந்தைக்கு வழங்கக் கூடிய நிவாரணங்களை உருவாக்குவது இன்றியமையாதது என குறிப்பிட்டார்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச நாடுகளுடன் கடன் மறு சீரமைப்பு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இருப்பினும் மக்கள் உணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி, சீதாவக்க மற்றும் பாதுக்க பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.