நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் பணியிடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக இராணுவம், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது