நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் மீதான விசாரணை செப்டம்வர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.