லிந்துலை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24லயன்குடியிருப்பு ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தீ விபத்தால் நான்கு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபதானது மின்சார ஒழுக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே சம்பவித்திருக்கலாம் என
பொலீசார் சந்தேகிக்கின்ற நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.