உலகின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினின் மகளும், பிரபல நடிகையுமான ஜோசபின் சாப்ளின் (Josephine Chaplin) தனது 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸின் தலைநகரான பாரிசில் வசித்து வந்த அவர் கடந்த 13 ஆம் திகதி வயது மூப்புக் காரணமாகஉயிரிழந்துள்ளார் எனவும் அவரது இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1952-ஆம் ஆண்டு சாப்ளின் இயக்கி, தயாரித்து நடித்த ‘லைம்லைட்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன்பின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என 3 மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.