இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய டிசம்பரில் ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இதுகுறித்து ஆராய்ந்தபோது அது வதந்தி என்று தெரியவந்துள்ளது.
அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், ஜூலி சங்கை திரும்ப அழைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ஜோ பைடனால் 2022இல் ஜூலி சங் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தக…
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கடந்த சில தினங்களாக பல்வேறுபட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்திலும் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். குறிப்பாக யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்திற்கு நேரில் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அதனை பார்வையிட்டிருந்த அதேவேளை பனை உற்பத்தி பொருட்களையும் ஆராய்ந்திருந்தார். பனை அபிவிருத்திச் சபையின் சபையினுடைய தலைவர்…
நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன்(julie chang) இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான (US United States Ambassador-at-Large for Global Criminal Justice) சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் (Beth Van Schaack) தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக…