மகாராஷ்டிரா, தானே மாவட்டம் ,சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியின்போது இராட்சத கிரேனொன்று சரிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இக்கோர விபத்தில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு இந்திய மதிப்பில் தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதேசமயம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மராட்டிய மாநில அரசும் அறிவித்துள்ளது.