லங்கா பிரிமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
பல்லேகலை மைதானத்தில் தற்போது ஆரம்பமாகவுள்ள போட்டியில் பி-லவ் கண்டி மற்றும் தம்புள்ளை அவுரா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பி-லவ் கண்டி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள அதேநேரம் தம்புள்ளை அவுரா அணி இரண்டில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
தம்புள்ளை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அலெக்ஸ் ரோஸ், சதீர சமரவிக்ரம, ஹைடன் கெர், பினுர பெர்னாண்டோ, ஷாநவாஸ் தஹானி, ரவிந்து பெர்னாண்டோ, நூர் அஹமட் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இதேநேரம் பி-லவ் கண்டி அணியில் பகர் ஸமான், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், மத்யூஸ், வனிந்து ஹசரங்க, அஷேன் பண்டார, ஆசிப் அலி, இசுரு உதான, மொஹமட் ஹஸ்னைன், முஜீப் உர் ரஹ்மான், துஷ்மந்த சமீர ஆகியோர் விளையாடவுள்ளனர்.