பாகிஸ்தான்-தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே புகையிரம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த புகையிரதம் கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் மீட்பு படையினர் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.