ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
காலிறுதிக்கு முன்னதாக நடப்பு சம்பியனான அமெரிக்காவை வீழ்த்திய சுவீடன் அணி, காலிறுதியில் ஜப்பானுக்கு எதிரான ஒரு அற்புதமான வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையில், பிரான்சுக்கு எதிராக பெனால்டி கிக் ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை அவுஸ்ரேலியா பெற்றுக்கொண்டது.
அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் முந்தைய சுற்றுகளில் வெளியேறியதால், 2011 க்குப் பிறகு முதல் முறையாக புதிய அணி ஒன்று உலகக்கிண்ண சம்பியன் பட்டத்தை வெல்லவுள்ளது.