சமீப காலமாக அரச மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு செல்லும் மக்களின் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவல நிலை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தசைப் பிடிப்புக்குச் சென்ற மாணவி காலை இழந்து, உயிரையும் இழந்ததையும், கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கிடைக்காத நிலையில், சுகாதார அமைச்சர் ஓட்டப் பந்தயங்களைத் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கின்றார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இனிமேலாவது அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.