நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 6பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.