டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்து நோவக் ஜோகோவிச், அமெரிக்க சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முன்னதாக் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான சம்பியன் பட்டத்தை கார்லோஸிடம் நோவக் ஜோகோவிச் இழந்திருந்த நிலையில் இந்த வெற்றி மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
ஓஹியோவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஜோகோவிச் 5-7, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதமை காரணமாக கடந்த ஆண்டு போட்டியைத் தவறவிட்ட நோவக் ஜோகோவிச் 2021 க்குப் பிறகு அமெரிக்காவில் பெற்ற முதல் வெற்றியாகும்.
அல்கராஸுடன் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது என்றும் நோவக் ஜோகோவிச் குறிப்பிட்டுள்ளார்.