அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 கருப்பினத்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளோரிடர் ஜெக்சன்வெலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், இரு ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.