“Jaffna Edition” என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி இரண்டாவது நாளாக இன்றும் ஆரம்பமானது.
குறித்த கண்காட்சி 2ம் நாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.
கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் பிரசண்ண ரணவீர, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அமைச்சின் செயலாளர்கள், கைத்தொழில் அதிகார சபை அதிகாரிகள், ஊழியர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த கண்காட்சி இன்றும், நாளையும், இடம்பெறவுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த கைத்தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன், சந்தைப்படுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.