காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று ( புதன்கிழமை) எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரிய வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.