நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து, தனது 57 ஆவது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று(08) காலமானார்.
எதிர் நீச்சல் என்ற நாடகத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரி முத்துவின் திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திரையுலகினரும், ரசிகர்களும் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு தமது இரங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தேனியைச் சேர்ந்த மாரிமுத்து எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.