சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணப்படம் போன்று காலத்திற்கு காலம் பல்வேறு காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின்றன என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.